வேலையிடங்களுக்கு அருகிலேயே இரவு முழுவதும் உறங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.. லாரி பயணத்துக்கு மாற்றா? கொதிக்கும் நெட்டிசன்கள்

migrant workers slept overnight in the open near work site
Credit: agentspinach/Reddit

வெளிநாட்டு ஊழியர்கள் வேலையிடங்களுக்கு அருகிலேயே படுத்து உறங்குவதாக Reddit தளத்தின் சமீபத்திய பதிவுகள் கூறுகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களின் இந்த நிலைமைகள் குறித்து இணைய பயனர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து, பணத்தையும் பெற்றுக்கொண்டு கடமை தவறிய அதிகாரிக்கு சிறை

பல ஊழியர்கள் தங்கள் வேலையிடங்களுக்கு அருகிலேயே யோகா பாய்களில் இரவு முழுவதும் உறங்குவதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

“agentspinach” என்ற Reddit பயனர், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலையிடங்களுக்கு அருகில் யோகா மேட்களில் ஓய்வெடுக்கும் மற்றும் தூங்கும் பல புகைப்படங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) வெளியிட்டார்.

Foreign workers sleeping overnight outdoors next to their worksite
by u/agentspinach in singapore

புகைப்படங்கள் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியிடவில்லை.

வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த சில இரவுகளில் அந்த இடத்தில் ஓய்வெடுப்பதை கவனித்ததாக அவர் கூறினார், மேலும் ஊழியர்களின் மேற்பார்வையாளர்கள் வரும் வரை அதாவது காலை 7 மணி வரை அவர்கள் உறங்குவதாகவும் அவர் சொன்னார்.

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதைத் தவிர்ப்பதற்காக வேலையிடத்திலேயே உறங்க அனுமதிப்பது புதிய போக்கா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பல பயனர்கள் ஊழியர்களின் இந்த நிலைமைகள் குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர், நடவடிக்கை எடுக்க வேண்டி மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) இதனை அனுப்பவும் சிலர் பரிந்துரைத்தனர்.

இன்னொருவர் இதுபற்றி கூறுகையில்: “வெளிநாட்டு ஊழியர்கள் மெரினா பே பாலங்களின் கீழும் பெஞ்சுகளிலும் உறங்குகிறார்கள்… இது அவர்களின் படுக்கைகளை விட மிகவும் வசதியாகவும் புதியதாகவும் இருக்கிறது” என்றார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இடி, மின்னலுடன் கனமழை.. குடை பிடித்து 21வது மாடியில் வேலை பார்க்கும் ஊழியர் – கவலை கொள்ளும் நெட்டிசன்கள்