இடி, மின்னலுடன் கனமழை.. குடை பிடித்து 21வது மாடியில் வேலை பார்க்கும் ஊழியர் – கவலை கொள்ளும் நெட்டிசன்கள்

person working 21st floor air-con compressor during storm
Credit: Stomp

சிங்கப்பூர்: இடி மின்னலுடன் மழை பெய்துகொண்டிருக்கும் போது 21வது மாடியில் அமர்ந்து AC கம்ப்ரஸரை சரி செய்துகொண்டிருந்த ஊழியரை கண்டு கவலையடைந்ததாக ஸ்டாம்ப் வாசகர் கூறியுள்ளார்.

கடந்த வியாழன் (ஆக.17) மதியம் 3 மணியளவில் பிளாக் 84A லோரோங் 2 தோ பாயோவில் இந்த கவலைக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கெப்பல் பே மெரினாவில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் சடலம்

அது தொடர்பில் வெளியான புகைப்படத்தில் ஊழியர் மழைக்காக குடை பிடித்து அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

பொதுவாக 21 வது மாடி ஜன்னலில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்வது மிக ஆபத்தானது.

அதுவும் குறிப்பாக மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது இவ்வாறு செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படும்.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என நம்புகிறேன் என வாசகர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் – அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை