உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்.. விடுதிக்கு திரும்ப பேருந்துக்காக 3 மணிநேரம் காத்திருந்த சோகம்

Migrant workers at Tanah Merah dorm have to wait hours for shuttle bus
(Image: TODAY)

உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது தங்கும் விடுதிக்கு செல்ல பேருந்துக்கு சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்ததாக கவலையுடன் கூறியுள்ளார்.

31 வயதான சையத் அபு என்ற அந்த வெளிநாட்டு ஊழியர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரைப் பார்க்க சென்றுள்ளார். ​​பின்னர் தானா மேராவில் உள்ள தனது தங்கும் விடுதிக்கு திரும்ப வேண்டி பேருந்திற்கு சுமார் மூன்று மணிநேரம் காத்திருந்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. $2 கொடுத்து சட்டவிரோத லாரி சேவையில் பயணிக்கும் நிலை

“நான் மிகவும் சோர்வாக இருந்தேன், ஆனால் அந்த பேருந்தை தவிர எனக்கு வேறு தேர்வு இல்லை,” என்று திரு அபு கூறினார்.

அவர் தானா மேரா கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள கோஸ்டல் விடுதியில் தங்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், TWC2 இன் துணைத் தலைவர் அலெக்ஸ் ஆவ் கூறுகையில்; அந்த தங்கும் விடுதியில் மருத்துவ வசதிகள் இல்லை என்று கூறினார்.

விடுதியில் இருந்து பொது போக்குவரத்தில் செல்ல, வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள தானா மேரா படகு முனையத்திற்கு செல்ல வேண்டும்.

அதாவது அப்பகுதிக்கு இயங்கும் ஷட்டில் பேருந்தில் செல்ல அவர்கள் S$1 செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

ஷட்டில் பேருந்தில் இடம் கிடைப்பது சுலபம் கிடையாது என்று கூறிய அலெக்ஸ் ஆவ், 35 முதல் 45 நிமிட இடைவெளியில் வரும் பேருந்து சேவை போதுமானதாக இல்லை என்றார்.

மேலும், ஷட்டில் பேருந்து இருக்கைக்காக அவர்கள் இரண்டு மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.

அந்த கோஸ்டல் தங்கும் விடுதி கடந்த 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் செயல்படத் தொடங்கியது. அங்கு 10,400 பேர் தங்க முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

வார இறுதி இரவுகள் மற்றும் விடுமுறை நாட்கள் போன்ற உச்சக் காலங்களில் மட்டுமே பேருந்திற்கான நீண்ட வரிசைகள் நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது 100, 200 அல்லது 300 பேர் வரிசையில் நிற்கலாம் என்றும் ஆனால், ஒவ்வொரு பேருந்திலும் 40 பேர் மட்டுமே செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாஸ் காட்டும் “தேக்கா நிலையம்”… பல்வேறு சிறப்புகளுடன் மீண்டும் திறப்பு