ஜூன் 14 முதல் இந்த நிறுவனங்களுக்கு அபராதமா? – பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க மனிதவள அமைச்சகம் அறிவிப்பு

Indian charged for duping insurers for foreign workers injury claims

சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பணியிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பிறகு பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை (June 14) முதல் கடுமையான அபதாரங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று மனிதவள அமைச்சகம் எச்சரித்துள்ளது.

நிறுவனங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் இருப்பதேபணியிட விபத்துக்கள் அதிகரிப்பதற்குமுதல் காரணமாகும்.எனவே, மனிதவள அமைச்சகத்தின் ஆய்வுகளின் போது கவனிக்கப்படும் குற்றங்களுக்கான அபராதம் S$1000 முதல் S$5000 வரை இரட்டிப்பாக்கப்படும்.

இந்த ஆண்டில் இதுவரை பணியிட விபத்துகளால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான விபத்துக்கள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் கடல் சார் கப்பல் கட்டும் துறைகளில் நடந்துள்ளன. நடுத்தர நிறுவனங்களில் 65 விழுக்காடு பணியிட மரணங்களும், பெரிய காயங்களும் ஏற்படுவதாக MOM தெரிவித்தது.

கடந்த ஆண்டின் முதல் பாதியோடு ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பணியிட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பணியிட உயிரிழப்புகளை கட்டுப்படுத்த மனிதவள அமைச்சகம் அமலாக்கத்தை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த ஆண்டின் காலாண்டு பகுதியோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு சோதனைகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு நிறுவனங்களிலும் சுமார் 1400 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. திங்களன்று நடத்தப்பட்ட ஆய்வுகளில் மனிதவள அமைச்சகம் பல்வேறு குறைகளை கண்டறிந்துள்ளது.

ACOP-ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை நிறுவனங்கள் பின்பற்றியதால் என்பதை நீதிமன்றங்கள் கருத்தில் கொண்டு தண்டனைகளையும் தீர்ப்புகளையும் வழங்கலாம் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.