‘பார்சிலோனா, மிலன் இடையே விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜனவரி 17- ஆம் தேதி முதல் மிலனில் (Milan) இருந்து பார்சிலோனாவிற்கு (Barcelona) குறுகிய தூர விமான சேவை வழங்கப்படும். இது ஐந்தாவது சுதந்திர இணைப்பு ஆகும். இந்த விமான சேவையானது வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் வழங்கப்படும். SQ378 என்ற பெயரில் A350-900 என்ற விமானம் இயக்கப்படும். மிலனில் இருந்து பார்சிலோனாவுக்கு ‘Economy’ இருக்கைக்கு 79.16 யூரோ மற்றும் ‘Premium Economy’ இருக்கைக்கு 174.16 யூரோ ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சைனாடவுன் பாயின்ட் மாலின் 4வது மாடியில் இருந்து விழுந்த ஊழியர் மருத்துவனையில் அனுமதி (வீடியோ)

SQ378 என்ற பெயரில் மிலனில் இருந்து பார்சிலோனாவுக்கும், SQ379 என்ற பெயரில் பார்சிலோனாவில் இருந்து மிலனுக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இது முழுக்க முழுக்க நேரடி விமான சேவை ஆகும்.” இவ்வாறு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எம்டி ஜோன் லிம் (Singapore Airlines MD for Spain and Portugal Joan Lim) கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரபலமான இத்தாலிய நகரத்திற்குச் செல்ல மேலும் ஒரு விருப்பத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மின்விசிறியில் தீ: விரைந்து சென்ற SCDF – உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது!

இப்போது வரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பார்சிலோனா விமானங்களை மிலன் வழியாக இயக்கி வருகிறது. ஆனால் இரண்டு ஐரோப்பிய நகரங்களுக்கு இடையே டிக்கெட்டுகளை விற்க அனுமதிக்கப்படவில்லை.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்கிழமை மற்றும் வியாழன்கிழமை ஆகிய மூன்று நாட்களில் சிங்கப்பூரில் இருந்து புறப்படும் விமானம், பார்சிலோனா, மிலன் இடையே விமான சேவை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.