அமலுக்கு வந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வு திட்டம்! – பலனடைவது யார்? உள்ளூர் ஊழியர்களா?

migrant worker lost money scammed
Pic: AFP/Roslan Rahman
சிங்கப்பூரில் குறைந்த வருமானம் பெறும் உள்ளூர் முழுநேர தொழிலாளர்கள் சுமார் 1,59,000 பேருக்கு குறைந்தபட்ச சம்பளமாக $1,400 இன்று (செப்டம்பர் 1) முதல் வழங்கப்படும்.
வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள்,உள்ளூர் தொழிலாளர்களை ஈர்க்க படிப்படியான சம்பள உயர்வின் கீழ் குறைந்தபட்சம் $1,400 வழங்கவேண்டும் என்று மனிதவள அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.மேலும்,இரண்டு ஊதிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரியும் குறைந்த வருமான தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுமுறை மூலம் சுமார் 19,000 முழுநேர ஊழியர்கள் பலனடைவர்.
துப்புரவு மற்றும் நிலவனப்புகளைச் சேர்ந்த 19,000 தொழிலாளர்களுக்கும் படிப்படியான ஊதிய உயர்வு செய்யப்படுவது இரண்டாவது மாற்றமாகும்.ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் முழுநேர குறைந்த வருமான ஊழியர்கள் ஊதிய உயர்வு திட்டத்தின் மூலம் பலனடைவர்.

வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க தொழில்நுட்பம், உற்பத்தித்திறன் மற்றும் ஊழியர்களின் திறன் ஆகியவற்றை மேம்படுத்தவேண்டும் என்று நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாக தேசிய முதலாளிகள் அமைப்பு அறிக்கையில் வெளியிட்டது.
ஊதிய உயர்வு முறையை நீட்டிக்கும் முயற்சியில் உரிய உரிமையாளர்களுடன் இணைந்து NTUC ஆராய்ந்து வருகிறது.