சிங்கப்பூர் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- ஆலோசித்தது என்ன?

சிங்கப்பூர் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- ஆலோசித்தது என்ன?
Photo: Minister Dharmendra Pradhan

 

 

இந்திய கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தொழில்முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மே 28- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, மே 29- ஆம் தேதி அன்று காலை 09.30 மணிக்கு சிங்கப்பூரின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங்-கை அவரது அலுவலகத்தில் இந்திய அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்திய 4ல் மூன்று நிறுவனங்கள்!

அப்போது, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், தொழிற்கல்வி ஆகியவைக் குறித்து இரு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

சிங்கப்பூர் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- ஆலோசித்தது என்ன?
Photo: Minister Dharmendra Pradhan

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை, தொழில்நுட்பம் குறித்து நேரில் பார்வையிட்டு, மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், இன்று (மே 29) மாலை 04.00 மணியளவில் சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங்-கை நேரில் சந்தித்துப் பேசிய இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பொருளாதாரம், வர்த்தகம், இறக்குமதி, ஏற்றுமதி, தொழில்நுட்பம் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

ஊழியர்களுக்கு புதுப்பிப்பு நடைமுறைகளை வழங்கியது Scoot நிறுவனம்

இந்த நிகழ்வின் போது, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.