அரசுமுறைப் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான்!

Photo: Wikipedia

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு அரசுமுறைப் பயணமாக இன்று (29/06/2022) சிங்கப்பூர் அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க!-நீரில் மிதக்கும் சூரிய மின் தகடு தொழில்நுட்பம் மூலம் சேமிக்கப்படும் மின்சாரம்

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பிரதமர் அலுவலகத்தின் அமைச்சரும், வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது அமைச்சரும், கல்வித்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் (Minister in the Prime Minister’s Office, Second Minister for Foreign Affairs and Second Minister for Education Dr Mohamad Maliki Osman) ஜூன் 29- ஆம் தேதி முதல் ஜூன் 30- ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறவுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபெர்டினாண்ட் ரோமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியரின் (Ceremony of President-elect of the Republic of the Philippines, Ferdinand Romualdez Marcos Jr) பதவியேற்பு விழாவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் ஆகியோரின் சார்பில் சிறப்புத் தூதுவராக சிங்கப்பூர் அமைச்சர் கலந்துக் கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் போது, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் அமைச்சருடன் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.