இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்!

இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்!
Photo: Singapore in India

 

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் இன்று (ஜூலை 28) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்!
Photo: Singapore in India

காணொளி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திரமோடி, “பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டு வர ஜி20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவிலான சட்டப்பூர்வக் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சென்னையில் தென்னிந்திய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!

இந்த கூட்டத்தில் சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்தன்மைத் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ மற்றும் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார்.