சென்னையில் தென்னிந்திய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!

சென்னையில் தென்னிந்திய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!
Photo: Singapore In India

 

ஜி20 மாநாட்டின் 4-வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் ஜூலை 27- ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 28- ஆம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகியோர் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்.

“வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதை செய்தாக வேண்டும்” – நாளுக்கு நாள் வலுக்கும் கோரிக்கை

இந்த ஜி20 கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்தன்மைத் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, சென்னை வந்தார். அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, கரகாட்டம், குதிரையாட்டம் உள்ளிட்ட தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், சிங்கப்பூர் அமைச்சருக்கு இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் மற்றும் தூதரக அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.

சென்னையில் தென்னிந்திய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!
Photo: Singapore In India

அதைத் தொடர்ந்து, பெருங்குடியில் உள்ள ‘Blue Planet Environmental Solutions’ என்ற திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேரில் பார்வையிட்டார். அத்துடன், குப்பைகளைப் பிரித்தெடுத்தல், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் முறை உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், சிங்கப்பூர் அமைச்சருடன் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மெர்லியன் சிலை மூடல் – புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை

இதனிடையே, சென்னையில் உள்ள உணவகத்திற்கு சென்ற அமைச்சர் கிரேஸ் ஃபூ மற்றும் தூதரக அதிகாரிகள், தென்னிந்திய உணவான தாலி உணவை (Thali meal) வாங்கி ரசித்து ருசித்து சாப்பிட்டனர். இது குறித்து, சிங்கப்பூர் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் கிரேஸ் ஃபூ, ருசியான தென்னிந்திய உணவுகளுடன் தாலி உணவோடு பயணத்தைத் தொடங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளது.