அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதான ஊழல் குற்றச்சாட்டு- பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Pmlee congrats govt officers
PHOTO: MCI

 

சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

“உழைப்புக்கு ஏற்ற கூலி முக்கியம்ங்க..” – கடமைக்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிங்கப்பூரில் தான் அதிகமாம்

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஜூலை 12- ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை 5- ஆம் தேதி அன்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைப்பின் இயக்குநர் என்னை சந்தித்தார். அப்போது, அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதும் மற்றும் வேறு பலர் மீதும் அதிகாரப்பூர்வமாக விசாரணைத் தொடங்குவதற்கு அனுமதிக் கோரினார். அதைத் தொடர்ந்து, ஜூலை 6- ஆம் தேதி அன்று சிபிஐபி இயக்குநருக்கு எனது ஒப்புதலை அளித்தேன்.

ஸ்ரீ ராமர் கோயிலில் பட்டாபிஷேகம்- ஸ்வர்ணாபிஷேகம் விழா கோலாகலம்!

இதையடுத்து, ஜூலை 11- ஆம் தேதி அன்று முறையான விசாரணை தொடங்கியது. அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தற்போது சிபிஐபி விசாரணையில் உதவி வருகிறார். இந்த விசாரணைகள் முடிவடையும் வரை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளேன். அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் விடுப்பில் இருக்கும் போது அவர் வகித்து வந்த போக்குவரத்துத்துறையை மூத்த துணையமைச்சர் சீ ஹோங் டாட் (Senior Minister of State Chee Hong Tat) தற்காலிகமாகக் கவனிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.