வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திமோர்- லெஸ்ட்டேவுக்கு பயணம்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜூலை 23- ஆம் தேதி அன்று திமோர்- லெஸ்ட்டேவுக்கு (Timor-Leste) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை- பேருந்து சேவைகள் தொடர்பான எஸ்எம்ஆர்டியின் முக்கிய அறிவிப்பு!

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜூலை 23- ஆம் தேதி முதல் ஜூலை 27- ஆம் தேதி வரை திமோர்- டெஸ்ட்டே நாட்டுக்கு அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

திமோர்- லெஸ்ட்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோ (Prime Minister Kay Rala Xanana Gusmão), அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்ட்டர் (President José Ramos-Horta) மற்றும் துணை பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை தனித்தனியே நேரில் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேசவிருக்கிறார்.

தலைநகர் டிலியில் (Dili) அந்த நாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களையும், நிறுவனங்களில் உயர் பொறுப்பில் உள்ள தலைமைச் செயல் அதிகாரிகளையும் சந்திக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் சமூக சங்கத்தின் (Singapore Community Association) தொடக்க விழாவிலும் கலந்து கொளளவிருக்கிறார்.

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை!

இந்த சுற்றுப்பயணத்தின் போது, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் உடன் செல்லவிருக்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.