தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை- பேருந்து சேவைகள் தொடர்பான எஸ்எம்ஆர்டியின் முக்கிய அறிவிப்பு!

Photo: SMRT

 

வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி சிங்கப்பூரில் தேசிய தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சிங்கப்பூரின் மரினா பேவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஜூலை 22, ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் ஆகிய மூன்று நாட்களிலும் 2023 தேசிய தினத்திற்கான அணி வகுப்பு ஒத்திகை (National Day Parade 2023) நடைபெறவுள்ளதால், பேருந்துச் சேவைகள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் (SMRT) அறிவித்துள்ளது.

தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை- பேருந்து சேவைகள் தொடர்பான எஸ்எம்ஆர்டியின் முக்கிய அறிவிப்பு!
Photo: SMRT

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை: 25 பேர் கைது

அதன்படி, மேலே குறிப்பிட்டுள்ள தினங்களில், 61, 75, 960, 960e, 961, 961M ஆகிய பேருந்து சேவைகள் 10- க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும் என எஸ்எம்ஆர்டி தெரிவித்துள்ளது. எந்தெந்த பேருந்து நிறுத்தங்களில் நிற்காது என்பது குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள புகைப்படத்தில் அறிந்துக் கொள்ளலாம்.

குறிப்பாக, 961M என்ற எண் கொண்ட பேருந்து, வார விடுமுறை நாட்களிலும், பொதுவிடுமுறை நாட்களிலும் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பெண்களிடையே கடும் சண்டை: பொறாமை தான் காரணமாம்

பேருந்துச் சேவைகளில் மாற்றங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800- 336- 8900 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், எஸ்எம்ஆர்டியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.