ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மதிய உணவு விருந்தளித்த அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Ministry Of Foreign Affairs, Singapore

ஜப்பான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி (Minister for Foreign Affairs of Japan Hayashi Yoshimasa), தனது முதல் வெளிநாட்டு அரசுமுறை மற்றும் அதிகாரப்பூர்வப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று (08/10/2022) காலை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

கட்டுமான ஊழியரை அடித்து தாக்கிய சக ஊழியர் – இதல்லாம் ஒரு காரணமா ?

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தார். பின்னர், ஜப்பான் அமைச்சருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மதிய உணவு விருந்தளித்தார்.

Photo: Prime Minister Of Singapore

சிங்கப்பூருக்கும், ஜப்பானுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளையும், வலுவான ஒத்துழைப்பையும் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மீண்டும் உறுதிப்படுத்தினர். ஆசியானில்  ஜப்பானின் ஈடுபாடு அதிகரிப்பதை பிரதமர் வரவேற்றார். பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் பயனுள்ள கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம்- விரிவான தகவல்!

அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி ஆகியோர் இருதரப்பு ஒத்துழைப்பில் நல்ல முன்னேற்றம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட பரிமாற்றங்களின் வலுவான வேகத்தை குறிப்பிட்டனர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்தனர்.

நேற்று (08/10/2022) பிற்பகல் தாமன் ஜூரோங் உணவு மையத்தில் (Taman Jurong Food Centre) மூத்த அமைச்சரும், சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் அவர்களால் அமைச்சர் யோஷிமாசா ஹயாஷிக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது”. இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.