மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று (15/06/2022) இந்தியா வருகிறார்.

“நிலாவே வா ” – நேற்று தோன்றிய சூப்பர் மூனை தவறவிட்டவர்களை அடுத்த மாதம் காண வரும் “Buck moon”

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இன்று (15/06/2022) முதல் ஜூன் 17- ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அமைச்சர் டாக்டர்  விவியன் பாலகிருஷ்ணன், நாளை (16/06/2022), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  டாக்டர் எஸ். ஜெய்சங்கருடன் டெல்லியில் நடைபெறும் சிறப்பு ஆசியான்- இந்திய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு (SAIFMM- ‘Special ASEAN-India Foreign Ministers’ Meeting’) இணைத் தலைமை தாங்குவார்.

டிப்பர் லாரி மோதி மனைவி மரணம்: திருமணமாகி 50 ஆண்டுகள்… “இனி நான் மட்டும் தனியாக இருக்க போகிறேன்” கண்ணீருடன் ஓட்டுநர்!

சிறப்பு ஆசியான்- இந்தியா உரையாடல் உறவுகளின் 30- வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஆசியான்- இந்தியா மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வழிகளை வெளியுறவு அமைச்சர்கள் விவாதிக்கவுள்ளனர்.

அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் (ASEAN Foreign Ministers) மற்றும் ஆசியான் பொதுச் செயலாளர் லிம் ஜாக் ஹோய் (ASEAN Secretary-General Lim Jock Hoi)ஆகியோருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளனர்.

சிங்கப்பூரின் மூத்த அரசாங்க வழக்கறிஞர் ஜி. கண்ணன் திடீரென உயிரிழப்பு – வெளியான காரணம்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனித்தனியாக சந்தித்துப் பேசவிருக்கிறார். அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் இந்தியா செல்லவுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.