யாருக்கு ஊதிய உயர்வு? – சிங்கப்பூரை கட்டிக்காக்கும் உள்துறை அமைச்சின் அதிகாரிகள்!எவ்வளவு சம்பளம் தெரியுமா?

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

சிங்கப்பூரின் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சுமார் 22,000 அதிகாரிகளுக்கு 3இலிருந்து 10 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஊதிய உயர்வு குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றன.

அதிகாரிகளின் ஊதிய மாற்றங்கள் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படுவதாகவும் அவை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப போட்டித்தன்மையாக அமைய மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரை பாதுகாப்பதில் சீருடை அணியும் அதிகாரிகளும் நிபுணத்துவ அதிகாரிகளும் முக்கியப்பங்காற்றுவதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே,சீருடைப் பிரிவு, சேவைகள், நிபுணத்துவத் திட்டம், வர்த்தக விவகாரங்கள் திட்டம் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.

ஊதிய உயர்வு மட்டுமின்றி அவர்களுக்கு அர்த்தமுள்ள தொழில்வாய்ப்புகளை வழங்கவும் அமைச்சகம் முயற்சி செய்கிறது