சிங்கப்பூரில் 16 வயதுப் பெண்ணை காணவில்லை – பொதுமக்களிடம் உதவி கோரிய காவல்துறை

missing girl Police appeal information
(Photos: Singapore Police Force)

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) முதல் காணாமல் போன 16 வயது பெண்ணை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு சிங்கப்பூர் காவல் படை (SPF) வேண்டுகோள் விடுத்துள்ளது.

வான் லீ ஜுவான் ஷெர்மெய்ன் (Wan Le Xuan Shermaine) என்ற அந்த பெண் கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் செங்காங்கில் உள்ள Blk 327D ஆங்கர்வேல் சாலையில் காணப்பட்டார் என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஆற்றில் இரு ஆடவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு

அந்த பெண், கருப்பு முகக்கவசம், கருப்பு தொப்பி, கருப்பு ஜாக்கெட், கருப்பு கால்சட்டை, கருப்பு காலணிகள் மற்றும் சாம்பல் நிற பையுடன் இருந்ததாக SPF ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

தகவல் ஏதும் தெரிந்தால், 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது தகவல்களை ஆன்லைனில் www.police.gov.sg/iwitness இல் சமர்ப்பிக்கவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று SPF கூறியுள்ளது.

தாம்சன் சாலையில் இடிக்கப்படும் 57 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டிடம்!