சிங்கப்பூரில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஆடவர்.. சடலமாக கண்டெடுப்பு

missing-80-year-old-man-found-dead
Shin Min Daily News and Google Maps

சிங்கப்பூரில் காணாமல் போனதாகக் கூறப்படும் 80 வயது முதியவர் எங்கே இருக்கிறார்? என்று காவல்துறை தேடி வந்தது.

இந்நிலையில், அவர் கடந்த திங்கள்கிழமை (ஜன. 3) டெஃபு லேனில் (Defu Lane) உள்ள கார் பார்க்கிங்கில் அமைந்துள்ள வாய்க்காலில் இறந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சீன புத்தாண்டு நெருங்குகிறது… இதற்காக சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமை ஆகுமா?

வில்லியம் லெக் ஸ்வே சுவா (William Leck Swe Chua) கடைசியாக டிசம்பர் 31, 2021 அன்று பிளாக் 313 ஹௌகாங் அவென்யூ 5க்கு அருகில் காணப்பட்டார் என்று நாம் முன்னர் பதிவிட்டோம்.

அவர் கடந்த ஜனவரி 3 அன்று 42 Defu Lane 7இல் கனரக வாகன நிறுத்துமிடத்தில் உள்ள வடிகால் ஒன்றில் இறந்து கிடந்ததாக Lianhe Zaobao தெரிவித்துள்ளது.

அவரது குடும்பத்தினர் அவரைக் காணவில்லை என்று தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் 80 வயது முதியவரை நான்கு நாட்களாக காணவில்லை

ஹௌகாங்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 1.3 கிமீ தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் சதிச்செயல் ஏதும் நடக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாகூர் கந்தூரி விழா: சிங்கப்பூரில் இருந்து நாகூர் பறந்த “சிறப்புக்கொடி”