“சிங்கப்பூரில் ஜூன் மாதம் காணாமல் போன ஆடவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை”

காணாமல் போன ஆடவர்

ஜூன் மாதம் காணாமல் போன ஆடவர் ஒருவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என சொல்லப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து தவறி விழுந்த அவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க கடலோரக் காவல்படை கூறியது என்று அவரின் சகோதரி நேற்று பேஸ்புக்கில் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் ஒன்றும் இல்லை.. அங்கு வாழ்க்கை நடத்த முடியாது..” என்று கூறிய சிங்கப்பூர் பெண் – கொதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர்

சிங்கப்பூர் படகோட்டியான திரு முஹம்மது ஃபுர்கான் முகமது ரஷித் (25) கடந்த ஜூன் 20 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் விழுந்தார்.

அமெரிக்க கடலோர காவல்படையின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக அவரது குடும்பத்தினர் இன்னும் காத்திருப்பதாக அவரது சகோதரி நூர் அஃபிஃபா முகமது ரஷித் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

“அறிக்கை விரைவில் எங்களிடம் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் எங்கள் குடும்பத்திற்கு அவர் குறித்த ஒரு விடை கிடைக்கும், என்ன நடந்திருக்கக்கூடும் என்பது பற்றிய கூடுதல் தெளிவையும் அது கொடுக்கும்” என்று மேலும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் அக். முதல் வரும் மாற்றங்கள்: வெளிநாட்டு ஊழியர்கள், வேலை, குற்றப்புள்ளிகள் – முழு தொகுப்பு