‘எங்கள் கொரோனா தடுப்பூசி மருந்து செயல்திறன் மிக்கது’- மாடெர்னா விளக்கம்!

Photo: Moderna Covid Vaccine Wikipedia

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ன. அதே சமயம், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

மொத்த மக்கள் தொகையில், இதுவரை சுமார் 62.4% பேர் முழுமையான கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். அதேபோல், 75.8% பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டனர்.

‘DBS’ வங்கியின் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் 37% அதிகரிப்பு!

ஃபைசர் (Pfizer), மாடெர்னா (Moderna), சிநோவக் (Sinovac) ஆகிய கொரோனா தடுப்பூசிகள் சிங்கப்பூரில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மாடெர்னா நிறுவனம் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், மாடெர்னா தடுப்பூசியின் முழுமையாகத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு பிறகு தடுப்பூசியின் செயல்திறன் 93% ஆக உள்ளது. சோதனைக் கட்டத்தில் மாடெர்னா தடுப்பூசியின் செயல்திறன் 94% ஆக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைசர்- பயோஎன்டெக் (Pfizer- BioNTech) நிறுவனங்கள் தங்களது மருந்தின் செயல்திறன் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு 84% செயல்திறன் இருப்பதாக, அந்த நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தன. சோதனைக் கட்டத்தில் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி மருந்தின் செயல்திறன் 90%-க்கு மேல் இருந்தது. இந்த இரண்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளும் எம்ஆர்என்ஏ (mRNA) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

முன்களப்பணியாளர்களைப் போற்றும் விதமாக சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது சிங்கப்பூர் அஞ்சல் துறை!

மாடெர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தின் விற்பனையும் இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. அந்த மருந்தின் விற்பனை சுமார் 4.4 பில்லியன் டாலராக உள்ளது.

உலகம் முழுவதும் டெல்டா வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். சில நாடுகளில் முழுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு ‘Booster’ எனப்படும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.