சிங்கப்பூர் மாஸ்… நிமிடத்திற்கு 100,000லி தண்ணீரை பீச்சியடிக்கும் புதிய கருவி

MHA

சிங்கப்பூர்: பெரிய அளவில் ஏற்படும் தீயை அணைக்க பிரம்மாண்ட புதிய தீயணைக்கும் சாதனத்தை SCDF அறிமுகப்படுத்தியுள்ளது.

நிமிடத்திற்கு சுமார் 100,000 லிட்டர் தண்ணீரை பீச்சியடிக்கும் திறன் கொண்ட சாதனம் தான் அது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு செம்ம சான்ஸ் – இப்போதே சேர்ந்து பயனடையுங்கள்

அதாவது ஒலிம்பிக் மைதான அளவிலான நீச்சல் குளத்தை வெறும் 25 நிமிடங்களுக்குள் அதனால் நிரப்படை முடியும் என சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நிமிடத்திற்கு 60,500 லிட்டர்கள் வரை நீர் பீச்சியடிக்கும் சாதனங்கள் நம்மிடம் இருந்தன.

கடல் போன்ற பெரிய நீர் நிலைகளில் இருந்து தண்ணீரை வேகமாக உள்ளிழுக்கும் திறன் அதற்கு உண்டு.

எண்ணெய் டேங்க் போன்ற பிரம்மாண்ட இடங்களில் ஏற்படும் தீயை துரிதமாக அணைக்க இது பயன்படும் என சொல்லப்படுகிறது.