சிங்கப்பூர் பொது மருத்துவமனை வார்டுக்குள் COVID-19 தொற்று பரவுகிறதா? – சுகாதார அமைச்சகம் விசாரணை..!

MOH investigating possibility of COVID-19 transmission within SGH ward
MOH investigating possibility of COVID-19 transmission within SGH ward (File PHOTO: AFP/ROSLAN RAHMAN)

சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) வார்டுக்குள் COVID-19 பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) விசாரித்து வருவதாக சுகாதார ஆணையம் (மார்ச் 6) தெரிவித்துள்ளது.

சம்பவம் 109-வதாக உறுதிப்படுத்தப்பட்ட 70 வயதான சிங்கப்பூர் ஆடவரும், வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய 126வது நபரும், பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 வரை SGH-ல் ஒரே வார்டில் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சோதனை; தங்கம் பறிமுதல்..!

இதில் 109-வது சம்பவம், கடந்த மார்ச் 2 அன்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் சுவாச அறிகுறிகளுடன் SGH சென்றனர், அவர்கள் இருவரும் மூன்று படுக்கைகள் கொண்ட சுவாச தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டனர் என்று SGH தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் இணை பேராசிரியர் டான் துவான் டோங் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

126வது நபர், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டாரா என்று கேட்டபோது, ​​MOH மருத்துவ சேவைகளின் இயக்குநர் பேராசிரியர் கென்னத் மாக் கூறினார்: “அதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் விசாரித்து வருகிறோம், ஆனால் ஒரே வார்டில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு குறுகிய காலத்தில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அது எங்களுக்கு கவலையான ஒன்று.”

இந்த அணுகுமுறையில் எந்தக் குறைபாடுகளும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு சிங்கப்பூர் பொது மருத்துவமனையிடம் MOH கூறியுள்ளது. மேலும், மூச்சுப் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளைக் கூடுதல் கவனத்துடன் நடத்துமாறு மருத்துவமனைகளிடம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: இந்தியாவில் அதிகரிக்கும் சம்பவங்கள் – மொத்தம் 31ஆக உயர்வு..!