எதிர்கால தொற்றுநோய்கள் பற்றி இனி அச்சம் வேண்டாம் – சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்

oyk-no-zero-covid
MCI/YouTube

சிங்கப்பூர் எதிர்கால தொற்றுநோய்களுக்கு தயாராக இருக்கும் நிலை மற்றும் கையாளும் திறன்களை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டம் இன்று (நவ.3) சுகாதார அமைச்சகத்தால் (MOH) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை MOH உடன் இணைந்து உருவாக்குவதே அதன் முக்கிய பணியாகும் என கூறியுள்ளது.

அனைத்து HDB குடியிருப்பு கார் பார்க்கிங்களிலும் 12,000 மின்-வாகன சார்ஜிங் அமைப்புகள்!

இந்த சிறப்பு வாய்ந்த பயனளிக்கும் திட்டத்தின் தொடக்கத்தில் அது குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யே குங் விளக்கி பேசினார்.

அதில், இந்த பிரத்யேகமான ஆராய்ச்சித் திட்டத்தை நாம் கொண்டிருப்பது, தொற்றுநோய் ஆராய்ச்சிச்சூழலில் உள்ள பல துறை நிபுணர்களை ஒன்றிணைக்க உதவும், என்றார்.

மேலும், எதிர்கால தொற்று நோய் வெடிப்பு அச்சுறுத்தல்களை கையாள தேவையான கருவிகள், முறைகள் மற்றும் தயாரிப்புகளை வலுப்படுத்த அது உதவும், என்றார்.

ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தற்போதைய திறன்களை சிங்கப்பூர் மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பதில் தவறாக சொன்னதற்காக 8 வயது மாணவியை அடித்து தாக்கிய ஆசிரியர் – 4 நாள் சிறை