பெண்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப முயற்சி எடுக்கும் ஊழியர் அணி இயக்கம் – சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

workplaces inspected breaching Covid-19 rules
(Photo: MOM/FB)

சிங்கப்பூரில் 25 முதல் 64 வயது வரையிலான கிட்டத்தட்ட 2,60,000 பெண்கள் வேலையில் சேராமல் இருக்கிறார்கள் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. நேற்று பிடோக்கில் சிங்கப்பூர் ஊழியர் அணி இயக்கம் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தியது. சிங்கப்பூரில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குடும்பப் பொறுப்புகள் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு ஆகும்.2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 61.2% விழுக்காட்டினர் வேலைக்கு செல்கின்றனர்.

சிங்கப்பூர் ஊழியரணி இயக்கம் பெண்கள் வேலையில் மீண்டும் சேர ஊக்குவிக்கும் முயற்சியில் ஒன்றாக (her career) என்ற புதிய செயல் திட்டத்தை தொடங்கியுள்ளது. NTUC-ன் e2i என்ற செயல் திட்டத்தின் மூலம் 2019 முதல் சுமார் 68,000-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்.

வேலைதேடும் பெண்களுக்கு உதவும் வகையில் புதிய செயல்திட்டங்களையும் தகவல்களையும் இணையதளம் மூலம் வழங்குகிறது. “அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் பல பெண்கள் வேலைக்கு திரும்புவதை காணமுடியும் என்பது நம் நம்பிக்கை” என்று மனிதவள அமைச்சகத்தின் துணை அமைச்சர் கான் சியாவ் கூறினார்.

வேலைக்கு திரும்ப நினைக்கும் பெண்களுக்கு ,ஆதரவு அளிப்பதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்த வேண்டியது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் பெண்கள் மேம்பாடு பற்றி வெள்ளை அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.அதனை அடுத்து தனது புதிய செயல்திட்டம் இப்போது தொடங்க படுவதாக சிங்கப்பூர் ஊழியர் அணி இயக்கம் நேற்று அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.