சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க அதிகாரிகள் கண்காணிப்பு..!

(Photo: Mothership)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பொது இடங்களில் கூடுவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடரும் என்று மனிதவள அமைச்சகம் (MOM), ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) கூறியுள்ளது.

சிட்டி பிளாசா, லக்கி பிளாசா மற்றும் லிட்டில் இந்தியா போன்ற வெளிநாட்டு ஊழியர்களிடையே பிரபலமான பகுதிகளில் கூட்டங்களை கலைப்பதற்கான இந்த முயற்சிகள் தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் லீ அனுப்பியதாக வலம்வரும் போலி மின்னஞ்சல்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

இதில் சுமார் 130 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதாவது கடந்த வாரம் 40 அதிகாரிகள் கண்காணிப்புப் பணி மேற்கொண்டனர்.

பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து எப்போதும் விளக்க முயன்று வருவதாகவும், MOM இன் வெளிநாட்டு மனிதவள மேலாண்மை பிரிவின் உதவி இயக்குனர் திரு ஆரோன் ஆங் கூறியுள்ளார்.

மேலும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு தரும்படியும், அவர்களின் ஆலோசனைகளைக் கேட்கும்படியும் வலியுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக மேலும் 42 பேருக்கு தொற்று உறுதி..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil