தென்னிந்திய மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உடும்பு கறி – மண்பானையில் “உடும்பு கறி சோறு” வைரல்

monitor-lizard-claypot-rice
KL Foodie/FB

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள உணவுக் கடை ஒன்றில் உடும்பு கறி உணவு விற்கப்படுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த உணவகம் சில ஆண்டுகளாகவே இந்த உணவை தயார் செய்து விற்பனை செய்கிறது, அது மீண்டும் வலைத்தளங்களில் பரவியதை அடுத்து வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் லாரி மோதி ஊழியர் மரணம் – தொடரும் உயிரிழப்புகள்

சட்டிசோறு உணவகத்தில், மண்பானையில் இருக்கும் உடும்பு கறி உணவின் புகைப்படங்கள் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியானது., அது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இது தென்னிந்திய உணவு வகை ஆகும். தமிழகத்தை சேர்த்தோர் குறிப்பாக கிராம புறங்களில் வசித்தோர் உடும்பு கறியை சுவைத்திருப்பார்கள். சிலருக்கு அது வியப்பாக கூட இருக்கலாம்.

உடும்புகள் பெரும்பாலும் இலைகள் மற்றும் பழங்களை மட்டுமே உண்ணும், எனவே அவை மனித நுகர்வுக்கு பாதுகாப்பானவை என்றும் கூறப்படுகிறது.

இதன் விலையும் கோழி கறியை விட இரட்டிப்பாகும் என்றும் சொல்லப்படுகிறது.

உங்களுக்கு உடுப்பு கறி பிடிக்குமா? கமெண்ட் பண்ணுங்க.

கடையில் திருட்டு வேலை… CCTV வீடியோவில் மாற்றிய ஊழியரை தேடிவரும் போலீஸ்