வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேருக்கு குரங்கம்மை; மெல்ல மெல்ல அதிகரிக்கும் பாதிப்புகள்

சிங்கப்பூரில் 10வது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

28 வயதுமிக்க அவர் சிங்கப்பூரில் வசிக்கும் தைவான் நாட்டை சேர்ந்த ஆடவர் என MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 10 முதலாளிகளில் எட்டு பேர் மட்டுமே ஊழியர்களுக்கு இதை செய்கின்றனர்…

கடந்த ஜூலை 22 அன்று அவருக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளது. பின்னர் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவ உதவியை நாடினார்.

அதே நாளில் அவர் தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், தொடர்பு தடமறியும் பணிகள் நடந்து வருவதாகவும் MOH தெரிவித்துள்ளது.

இவருக்கு ஏற்பட்ட குரங்கம்மை நோய்த்தொற்றுக்கும் முந்தைய குரங்கம்மை சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த காவல்படையை கொண்ட நாடு சிங்கப்பூர்… 10வது மாடியில் ஆபத்தாக தொங்கிய AC – வீட்டை உடைத்து அகற்றிய போலீஸ்!