உலகின் சிறந்த காவல்படையை கொண்ட நாடு சிங்கப்பூர்… 10வது மாடியில் ஆபத்தாக தொங்கிய AC – வீட்டை உடைத்து அகற்றிய போலீஸ்!

Singapore super Police
Shin Min Daily News

சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் பணி மிகவும் போற்றத்தக்கது, அதை யாரும் மறுக்க முடியாது.

ஏனெனில், அவர்கள் குற்றங்களை மட்டும் எதிர்த்துப் போராடுவதில்லை, அதோடு துன்பத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு உதவுவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.

சிங்கப்பூரில் 13 ஆண்டுகளில் இல்லா அளவு எகிறிய விலைவாசி; தங்கும் விடுதிகளில் செலவுகள் கூடுமா?

குறிப்பாக மக்களின் வீட்டுச் சண்டைகளை பேசி முடித்து வைப்பது மற்றும் வீடுகளில் சிக்கியுள்ள விலங்குகளைக் காப்பாற்றுவது போன்ற சிறந்த பணிகளையும் அவர்கள் தொய்வின்றி செய்வார்கள்.

சமீபத்தில், பிளாக் 55 சாய் சீயில் உள்ள 10வது மாடி HDB வீட்டில் ஏர்-கான்டென்சர் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்தது.

அதனை கண்ட சில அக்கறைகொண்ட பொதுமக்கள் அது பற்றி கடந்த புதன்கிழமை (ஜூலை 20) மதியம் 1 மணியளவில் காவல்துறையிடம் தகவல் கொடுத்தனர்.

அதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டுக்கு கீழ் உள்ள பகுதியை சுற்றி வளைத்து தங்கள் பணியை முடிக்கிவிட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, அந்த வீட்டு உரிமையாளர் அப்போது வீட்டில் இல்லை, மேலும் போலீஸ் வலுக்கட்டாயமாக அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டியிருந்தது என்று ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. பிறகு பாதுகாப்பாக அதனை அகற்றினர்.

திருத்தங்கள்

இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ள காவல்துறை சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ள.

அதன் கீழ், அவசர காலங்களில் எந்த இடத்திலும் வலுகட்டாயமாக உள்ளே நுழைவதற்கும், காயம் அல்லது மரணத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் காவல்துறைக்கு சட்டப்பூர்வமாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போலீசுக்கு ஒரு ராயல் salute.

வெளிநாட்டு பணியாளர்கள் சிங்கப்பூருக்கு மிக முக்கியம்; புதிய ஏற்பாடு கண்டிப்பாக பயன்தரும்!