சிங்கப்பூரில் 13 ஆண்டுகளில் இல்லா அளவு எகிறிய விலைவாசி; தங்கும் விடுதிகளில் செலவுகள் கூடுமா?

(Photo: Roslan Rahman/ AFP/Getty Images)

சிங்கப்பூரின் பணவீக்கமானது 2008 நவம்பர் மாதத்துக்கு பிறகு இந்தாண்டு ஜூன் மாதத்தில் அதிகபட்ச அளவை எட்டியது.

அதில் குறிப்பாக சேவைகள், உணவு, சில்லறை விற்பனை, மின்சாரம் மற்றும் கேஸ் போன்ற பல பிரிவுகளில் விலை அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு பணியாளர்கள் சிங்கப்பூருக்கு மிக முக்கியம்; புதிய ஏற்பாடு கண்டிப்பாக பயன்தரும்!

அதாவது அந்த 13 ஆண்டு காலகட்டத்தில் காணாத விலைவாசி உயர்வு தற்போது அதிகரித்துள்ளது.

தங்குமிடம் மற்றும் தனியார் போக்குவரத்துச் செலவுகளைத் தவிர்த்து, ஆண்டு அடிப்படையில் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.4 சதவீதமாக இருந்தது.

அதற்கு முந்தைய மே மாதத்தில் அது 3.6 சதவீதமாக இருந்தது, இந்த தரவுகள் நேற்று (ஜூலை 25) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.

ஆண்டு அடிப்படையில், 2008ல் இந்த பணவீக்கம் 5.5 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“உயிர் போனா திரும்பி வருமா?” – மனைவியுடன் சண்டை… கோபத்தில் காரில் இருந்து குதித்த கணவன்!