நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய லேண்டர்!

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய லேண்டர்!
Photo: ISRO

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. சந்திரயான்- 3 விண்கலம் 10 கட்டங்களாகப் பயணித்து நிலவில் லேண்டர் தரையிறங்கியது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ‘Gardens by the Bay’- க்கு அழைத்துச் சென்ற ‘ItsRainingRaincoats’!

போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே நிலவின் தென் பகுதியில் லேண்டர் தரையிறங்கியது. லேண்டரில் பொருத்தப்பட்ட நான்கு சிறிய ராக்கெட்டுகள் மூலம் நிலவில் தரையிறங்கியது. 749.86 கிலோ எடைக்கொண்ட லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிலையில், 14 நாட்கள் செயல்படும்.

அதாவது பூமியின் நேரப்படி 14 நாட்களும்; நிலவின் நேரப்படி ஒரே ஒரு நாளில் செயல்படவுள்ளது. 22 நொடிகள் செங்குத்தாக நின்ற லேண்டர் செங்குத்தாகவே நிலவில் தரையிறங்கியது. 40 நாள் பயணத்தையடுத்து, ‘Soft Landing’ மூலம் நிலவில் லேண்டர் தரையிறக்கப்பட்டது.

சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், லேண்டர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி தனித்தனியாகப் பிரிந்தது. தனியாகப் பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு, நிலவை நோக்கிப் பயணித்தது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது சந்திரயான்- 3 விண்கலம்.

பொம்மைகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த பயணி….சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி! (வீடியோ)

சந்திரயான்- 3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.