புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ‘Gardens by the Bay’- க்கு அழைத்துச் சென்ற ‘ItsRainingRaincoats’!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 'Gardens by the Bay'- க்கு அழைத்துச் சென்ற 'ItsRainingRaincoats'!
Photo: ItsRainingRaincoats

 

சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வரும் அமைப்பு ‘ItsRainingRaincoats’. உணவுகள், உடைகள், பண்டிகை நாட்களில் பரிசுப் பொருட்களையும் வழங்கி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் வருகிறது.

வெளிநாட்டு பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து, பணத்தையும் பெற்றுக்கொண்டு கடமை தவறிய அதிகாரிக்கு சிறை

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல சுற்றுலா தளமான ‘Gardens by the Bay’- வுக்கு சுமார் 150 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ‘ItsRainingRaincoats’ அமைப்பின் நிர்வாகிகள் பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 'Gardens by the Bay'- க்கு அழைத்துச் சென்ற 'ItsRainingRaincoats'!
Photo: ItsRainingRaincoats

அங்கு ஒளி, ஒலி காட்சிகளையும், தோட்டங்களையும், அனிமேஷன்களையும் கண்டுகளித்தனர். அத்துடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்பி புகைப்படங்களை எடுத்து, வாட்ஸ் அப் மூலம் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலையிடங்களுக்கு அருகிலேயே இரவு முழுவதும் உறங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.. லாரி பயணத்துக்கு மாற்றா? கொதிக்கும் நெட்டிசன்கள்

நாள் முழுவதும் அங்கேயே பொழுது களித்தனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் ‘ItsRainingRaincoats’ அமைப்புச் செய்திருந்தது. பின்னர், அனைவரும் குழு புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.