மலேசியாவில் கடும் வெள்ளத்தால் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – மீண்டும் கனமழை எச்சரிக்கை

AFP

மலேசியாவில் கடுமையான வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அடுத்த வாரம் அங்கு சில பகுதிகளில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெள்ளத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50,000 பேர் ஆறு மாநிலங்கள் மற்றும் தலைநகர் கோலாலம்பூரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய கணவரின் வீட்டிற்கு சென்ற மனைவி மர்மமான முறையில் மரணம் – போராட்டத்தில் உறவினர்கள்

கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்தாலும், அடுத்த வாரம் மலேசியாவின் சில பகுதிகளில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி சிலாங்கூர் மற்றும் பகாங்கில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது, கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 21 பேர் இறந்தனர் மற்றும் 200,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (டிசம்பர் 24) வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 8 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.

இந்நிலையில், கெலந்தன், தெரெங்கானு மற்றும் பகாங் உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளிலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வகம் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 25) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் 17 பேர், வெளிநாட்டில் இருந்து வந்த 65 பேருக்கு “Omicron”