சிங்கப்பூரில் இருந்து திரும்பிய கணவரின் வீட்டிற்கு சென்ற மனைவி மர்மமான முறையில் மரணம் – போராட்டத்தில் உறவினர்கள்

Tamilnadu singapore worker wife death

திண்டுக்கல் மாவட்டம், ரெண்டலப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஐசக் நியூட்டன், இவர் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

நியூட்டனுக்கு, மெசியா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த வெறும் 10 நாட்களிலேயே நியூட்டன் சிங்கப்பூர் பணிக்கு சென்றுள்ளார்.

பெயர், புகைப்படம் இல்லாமல் 2 ஆண்டுகளாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி செய்யும் இளைஞர்!

இந்நிலையில், கணவன் ஐசக் நியூட்டனின் வீட்டில் மெசியா வசித்துவர, குடும்ப தகராறு காரணமாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார் மெசியா.

இதனை அடுத்து, ஐசக் நியூட்டன் சிங்கப்பூரில் இருந்து இந்த மாதம் 19ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்ததும், மனைவி மெசியாவை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

இதனை அடுத்து, சமாதானப்படுத்தி ஐசக் நியூட்டனுடன் மெசியாவை பெற்றோர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின்னர், பெற்றோர் மெசியாவை தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர், ஆனால் அவர்களது அழைப்பை மெசியா ஏற்கவில்லை.

இதனால் பலத்த சந்தேகமடைந்த மெசியாவின் பெற்றோர், மருமகன் ஐசக் நியூட்டனின் வீட்டிற்கு சென்றுள்ளனர், அங்கு வந்து பார்த்த போது தான் உண்மை தெரியவந்தது.

மெசியா தனது மாமியார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்நிலையில், மெசியாவின் மரணத்தில் எதோ மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐசக் நியூட்டன், அவரது தாய் ராஜகுமாரி, சகோதரன் ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“எல்லாருக்கும் பண்டிகை காலம் மகிழ்ச்சியாய் அமைவதில்லை” – வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள்!