குடையுடன் செல்லத் தயாராகுங்கள்.. சிங்கப்பூரில் அதிக மழை பெய்யலாம் – வெப்பத்துக்கு சிறிது ஓய்வு

sg weather thundery-showers

சிங்கப்பூரில் இந்த அக். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் கூறியது.

அக். முற்பாதியில் நிலவிய வெப்பமான வானிலைக்கு இந்த மழை சிறிது ஓய்வு அளிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

விரும்பிய போட்டோவை வெறும் S$0.50 க்கு பிரிண்ட் எடுக்கலாம் – IKEA அலெக்ஸாண்ட்ரா அமைத்துள்ள சுவர் போட்டோபூத்

மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது வெப்பநிலையானது குறைவாக இருக்கலாம்.

அதேபோல, அதிகபட்ச தினசரி வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 33°C முதல் 34°C வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தை பொறுத்தவரை, பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மழையானது சில நாட்களில் மாலை வரை நீடிக்கும்.

மேலும் இரண்டாம் பாதியில், தீவின் சில பகுதிகளில் காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் குறுகிய கால இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ரொட்டி வாங்க காசு இல்லாமல் தவித்த வெளிநாட்டு பணிப்பெண்… ரொட்டியுடம் பணத்தையும் அள்ளிப்போட்டு கொடுத்த பெண்மணி