“வேலை அழுத்தம் தாங்க முடியல”-நிம்மதியா தூங்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்கும் செல்லும் சிங்கப்பூரர்கள் – ஆய்வு

more-singaporeans-plan-vacations-goal-sleep
Unsplash

சிலர் தங்கள் விடுமுறையில் பல திட்டங்களை நிறைவேற்றவும், பல இடங்களுக்கு சுற்றிப்பார்க்க செல்வதும் வழக்கம்.

ஆனால் வித்தியாசமாக, திருமதி பிரியா இளங்கோவன் என்பவர் முடிந்தவரை நிம்மதியாக தூங்க வேண்டும் என விரும்பி வெளிநாட்டுக்கு பயணம் செய்வதாக கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் 36 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு

33 வயதான அவர், 2016 ஆம் ஆண்டு முதல் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காகவே இந்தோனேசியாவில் உள்ள தீவுகளுக்கு பயணம் செய்து வருகிறார்.

அதாவது அவர் ஊடகத் துறையை சேர்ந்தவர் என்றும் வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவர் பயணம் மேற்கொள்வதாக Today கூறியுள்ளது.

அவர் மட்டுமல்ல, பயண தளமான Booking.com மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி பலர் தூங்குவதற்காவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட பயணிகளில் 67 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு அவ்வாறாக பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நல்ல ஓய்வு பெறுவதை மையமாகக் கொண்டு பயணங்களை முன்பதிவு செய்யப்படுவதாக Booking.com கண்டறிந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து 502 பேர் உட்பட 33 நாடுகளில் இருந்து சுமார் 27,000 க்கும் மேற்பட்ட பயணிகள் ஆன்லைன் கணக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.

ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்