சிங்கப்பூரில் வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் 140,000 முதலாளிகளுக்கு S$4 பில்லியன்..!

15 companies temporarily barred from hiring foreign workers during heightened safety period

சிங்கப்பூரில் வேலை ஆதரவு திட்டத்தின் (JSS) கீழ், சுமார் S$4 பில்லியனுக்கும் அதிகமான தொகை, ஜூலை 29 முதல் முதலாளிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 140,000-க்கும் மேற்பட்ட முதலாளிகள், (சுமார் 1.9 மில்லியன் உள்நாட்டு ஊழியர்களுக்கு) தங்கள் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் வகையில் நிதி பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பொதுப் பேருந்தில் தவறான முறையில் பெண் பயணியை புகைப்படம் எடுத்த ஆடவர் கைது..!

இந்த ஜூலை மாத விநியோகத்துடன், உள்நாட்டு ஊழியர்களுக்கான ஊதிய செலவினங்களை ஆதரிப்பதற்காக முதலாளிகளுக்கு S$15 பில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டிருக்கும் என்றும் துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு அனைத்து முதலாளிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த காலகட்டத்தில் செயல்பாடுகளை மாற்றுவதற்கும், ஊழியர்களை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்றும் அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

தங்கள் உள்நாட்டு ஊழியர்களுக்கு கட்டாய மத்திய சேமநிதி (CPF) பங்களிப்புகளை வழங்கிய முதலாளிகள், JSS பெற தகுதி பெறுவார்கள்.

இதில் விமானத் துறை, சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்த முதலாளிகளுக்கு 75 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுச் சேவைகள், சில்லறை விற்பனை, கலை மற்றும் பொழுதுபோக்கு, நிலப் போக்குவரத்து, மேலும் கப்பல் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீதம் வரை சலுகைகளும், மற்ற துறைகளில் உள்ளவர்கள் 25 சதவீதம் சலுகையைப் பெறுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 257 பேர் பாதிப்பு – வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேருக்கு தொற்று உறுதி..!