சிங்கப்பூரின் இந்த மாத வானிலை.. இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

Pic: Roslan RAHMAN/AFP

சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் பாதியில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்றும், இந்த மாதம் முழுவதும் வடமேற்குப் பருவமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில், பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸில் இருந்து
33 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்டிருக்கும்.

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை- 1.18 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்!

மேலும், சில நாட்களில் வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியஸை எடக்கூடும் என்றும்,
இரவு நேரங்களில் தட்பநிலை குறைந்தது 28 டிகிரி செல்சியஸாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில், காலை முதல் பிற்பகல் குறுகிய நேரம் வரை இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம்.

மேலும், இரண்டாம் வாரத்தின் பெரும்பாலான நாட்களில், குறுகிய நேரத்தில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிக உயரமான அஞ்சல் தலைகளை வெளியிட்டது சிங்கப்பூர் அஞ்சல் துறை!