சாங்கி ஏர்போர்ட் செல்லும் வழியில் விபத்து.. ஆடவர் மரணம்

சாங்கி ஏர்போர்ட் செல்லும் வழியில் விபத்து.. ஆடவர் மரணம்
Facebook/SG Road Vigilante

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் (ECP) ஏற்பட்ட விபத்தில் 49 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

சனிக்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் சாங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும் ECPஇல் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது என TODAY கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இந்திய ஊழியருக்கு சிறை விதிப்பு.. பிரம்படி??

மோட்டார் சைக்கிள் தானாக சறுக்கிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஐந்து வழிகள் கொண்ட நெடுஞ்சாலையின் வலதுபுறம் உள்ள இரண்டு பாதைகளும் மூடப்பட்டன.

விபத்தில் தொடர்புடைய 65 வயதுடைய கார் ஓட்டுநர் விசாரணைகளுக்கு உதவுவதாக போலீசார் தெரிவித்தனர்.

“இந்த வேலையை செய்யுங்க உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்” – ஏமாந்துபோன பல ஆயிரம் பேர்