சிங்கப்பூரில் ஆடையின்றி சுற்றித்திரிந்த மோட்டார் சைக்கிளோட்டி… வைரலான வீடியோ – குற்றத்தை ஏற்றார்

Mothership

முழுவதுமாக ஆடையின்றி மோட்டார் சைக்கிளில் சென்ற ஆடவரின் நிர்வாண புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளங்களில் தீயாய் பரவின.

இயோ குய் வெய் என்ற 25 வயதான அந்த ஆடவர் நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஒட்டியது மற்றும் பொது இடங்களில் நிர்வாணமாகச் சென்றது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் அத்துமீறல் குற்றத்தையும் ஒப்புக்கொண்டார் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

வெளிநாட்டவர்களால் சீரழிக்கப்பட்ட பெண்… ஓடி உதவிய வெளிநாட்டு ஊழியர்.. இருவர் இடையே நடந்த உரையாடல் – முழு தொகுப்பு

2021ஆம் ஆண்டு ஜூன் 10 அன்று யோ மேற்கண்ட குற்றங்களை செய்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இவரை தொடர்ந்து நிர்வாணமான பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

அதாவது பொது இடங்களில் யோ நிர்வாணமாக இருந்ததாக கடந்த ஆண்டு ஜூன் 10 அன்று காலை 5:43 மணி முதல் மாலை 3:36 மணி வரை மொத்தம் எட்டு புகார்கள் காவல்துறைக்கு கிடைத்ததாக அது தெரிவித்துள்ளது.

பின்னர் அவர் ஜூன் 11, 2021 அன்று கைது செய்யப்பட்டார். அவர் மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

விடுதியில் வசிக்கும் 30,000 ஊழியர்கள் வரை… 8 மணி நேரம்… சமூக பொது இடங்களுக்கு செல்ல அனுமதி