மது அருந்தி வாகனம் ஓட்டி பிடிபட்ட 23 பேர் – அனைத்து வகை வாகனங்களை ஓட்டவும் தடை விதிக்கப்படலாம்

motorists-charged-drink-driving
Singapore Police Force

சிங்கப்பூரில் 23 வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

20 முதல் 49 வயதுக்குட்பட்ட அவர்கள் மீது கடந்த ஆகஸ்டு 24 அன்று குற்றம் சாட்டப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

கார்-லாரி கடும் விபத்து: மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மரணம்

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட்க்கு இடையில் நடந்த வழக்கமான சோதனைகளின் அவர்கள் பிடிபட்டனர்.

சோதனையின்போது மூச்சுவிடும் பரிசோதனையில் அவர்கள் தோல்வியடைந்ததால் கைது செய்யப்பட்டனர்.

அதில் ஒன்பது பேர் மட்டும் மற்ற போக்குவரத்து குற்றங்களுக்காக கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கு S$2,000 முதல் S$10,000 வரை அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அடுத்தடுத்தக் குற்றத்திற்கு S$5,000 முதல் S$20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

மேலும் குற்றவாளிகள் அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டுவதற்க்கும் தடை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

நீரில் கண்டெடுக்கப்பட்ட மேலும் ஒரு ஆடவர் உடல் – போலீஸ் விசாரணை