சிங்கப்பூரில் தமிழின் இலக்கிய நிலை மற்றும் தமிழ் எழுத்தாளர் நிலை….!

சிங்கப்பூரில் தமிழின் இலக்கிய நிலை மற்றும் தமிழ் எழுத்தாளர் நிலை குறித்த கேள்விக்கு, சிங்கப்பூர் பொது நூலகங்களின் தமிழ் சேவைப் பிரிவின் தலைவர் அழகியபாண்டியன் அவர்கள் அழகிய பதிலை கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழ் இலக்கியவாதிகளை இரண்டாக பிரித்து கூறலாம், அதாவது சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர்கள், தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தொழில், பணிகளுக்காக சிங்கப்பூர் வந்து தங்கியவர்கள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிரதமர் லீ கலந்துகொண்ட தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்..!

இதில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையிலே உள்ளனர். ஆனால், தமிழகத்தில் இருந்து பணி நிமித்தமாக சிங்கப்பூர் வந்த இலக்கியவாதிகள் அதிகம்.

சிங்கப்பூர் அரசு, சீனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு சமமான அந்தஸ்தை அளித்து அவற்றின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழ் இரண்டாவது மொழியாக உள்ளது. ஆனால், தாய்மொழி கற்கும் தமிழர்களின் குழந்தைகள் தேர்ச்சி பெறும் வகையிலே அதைக் கற்றுவருவது வருந்தக்கூடியதுதான். தேர்வைத் தாண்டி தமிழ் இலக்கியத்தைக் கற்கும் வகையில் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் சில பணிகளை முன்னெடுத்துள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இதையும் படிங்க : புதிய ஆண்டு துவங்கியதில் இருந்து மூன்று பேர் பணி இடத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழப்பு..!

சிங்கப்பூர் அரசு தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை நூலகங்கள் மூலமும் செயல்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள 26 கிளை நூலகங்கள் மூலம் ஆண்டுதோறும் நூலக வாசிப்பு வாரம் நடத்தப்படுகிறது. அப்போது தமிழக எழுத்தாளர் புத்தக அறிமுகம், மறைந்த எழுத்தாளர் நினைவு நிகழ்ச்சி, திறனாய்வு என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஆண்டுதோறும் ஜூன், ஜூலையில் ஐந்து வாரங்கள் நடைபெறும் வாசிப்பு நிகழ்ச்சிகளை அந்தந்த நகரங்கள் முழுமையும் கடைப்பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இளம் எழுத்தாளர் வட்டம் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் தமிழோடு மற்றொரு மொழித் திறனையும் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது எடுக்கப்பட்டுவரும் தமிழ் வளர்ச்சி நடவடிக்கையால் எதிர்காலத்தில் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் உருவாகும் நிலை ஏற்படும் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.