சிங்கப்பூரில் பிரதமர் லீ கலந்துகொண்ட தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்..!

தமிழர்களின் பொங்கல் திருநாளில், “பொங்கலோ பொங்கல்!” என்ற ஓசையுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) புக்கிட் பஞ்சாங் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடினர்.

பெண்டிங் எல்.ஆர்.டி நிலையத்திற்கு அடுத்துள்ள ஒரு திறந்தவெளியில், சுமார் 2,000 குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடி தங்கள் பாரம்பரிய முறைப்படி இந்த பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க : புதிய ஆண்டு துவங்கியதில் இருந்து மூன்று பேர் பணி இடத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழப்பு..!

புக்கிட் பஞ்சாங் எஸ்.எம்.சி.யின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தியோ ஹோ பின் (Dr Teo Ho Pin) தொகுத்து வழங்கிய இந்த விழாவில் பிரதமர் லீ ஹ்சியன் லூங் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

(Photo : Straits Times)

இதில் “பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பொங்கலைக் கொண்டாட ஒன்றாக வந்துள்ளனர்” என்பதைக் குறிப்பிட்ட பிரதமர் லீ “சிங்கப்பூரில் மட்டுமே இது நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : முதலாளியை கத்தியால் தாக்கியதாக வீட்டுப் பணிப்பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது..!

மேலும் கோலாட்டம், மயிலாட்டம் ஆகிய தமிழர் பாரம்பரியக் கலைகளுடன் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. புக்கிட் பாஞ்சாங் தொகுதியில் 13ஆவது ஆண்டாக இந்த பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.