புதிய ஆண்டு துவங்கியதில் இருந்து மூன்று பேர் பணி இடத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழப்பு..!

workers safety lapses death 2 jailed mom
(Photo: Ministry of Manpower)

3 workplace deaths since start of new year – MOM: இந்த 2020 புதிய ஆண்டு துவங்கியதில் இருந்து மூன்று பேர் பணி செய்யும் இடத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் இறந்துள்ளனர், என்று மனிதவள அமைச்சகம் (MOM) ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜனவரி 19) தெரிவித்துள்ளது.

மேலும், நிறுவனங்கள் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை (PR) விண்ணப்பிக்க போலியான தகுதி விண்ணப்பம்; பெண் ஒருவருக்கு சிறை..!

“பண்டிகை காலங்களை முன்னிட்டு, சில நிறுவனங்கள் தங்கள் காலக்கெடுவைச் சரிக்கட்ட பணி நடவடிக்கைகளை அதிகரிக்கக்கூடும். பணி நடைமுறைகளை மறுஆய்வு செய்வதற்கும், தேவையான பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் மனிதவள அமைச்சகம் நினைவூட்டல் செய்துள்ளது”.

மேலும், “அனைத்து தொழிலாளர்களும் தங்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலுக்கு தகுதியானவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக, அவர்கள் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக வீடு திரும்ப வேண்டும்,” என்று MOM கூறியுள்ளது.

இந்த (2020) ஆண்டில் ஏற்பட்ட விபத்துகள்:

இந்த ஆண்டு நடந்த முதல் விபத்தில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி ஒரு தொழிலாளியின் மீது சிலிண்டர் வைக்கும் கருவி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது சம்பவத்தில், ஃபார்ம்வொர்க் கட்டமைப்பை (formwork structure) நகர்த்தும்போது, அதில் ஒருபகுதி தொழிலாளர்களில் ஒருவரின் மீது விழுந்தது, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.

மூன்றாவது சம்பவத்தில், ஒரு தொழிலாளி படகில் இருந்து கடலில் விழுந்ததாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : முதலாளியை கத்தியால் தாக்கியதாக வீட்டுப் பணிப்பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது..!

சிங்கப்பூரில், கடந்த 14 ஆண்டுகளில் பணி செய்யும் இடங்களில் ஏற்பட்ட கொடூர காயங்களின் விகிதம் 75 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

இந்த விகிதம் 2004-ல் 100,000 தொழிலாளர்களுக்கு 4.9 ஆக இருந்தது, தற்போதைய 2018-ல் 100,000 தொழிலாளர்களுக்கு 1.2 ஆக குறைந்துள்ளது.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 100,000 தொழிலாளர்களுக்கு 1.0 ஆகக் குறைப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.