சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை (PR) விண்ணப்பிக்க போலியான தகுதி விண்ணப்பம்; பெண் ஒருவருக்கு சிறை..!

Filipina jailed 7 weeks for faking Manila university degree in Singapore PR application (Photo : ICA)

Singapore PR : சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை (PR) விண்ணப்பத்தில் போலியாக, மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக கூறி மோசடி செய்த 38 வயதான பிலிப்பைஸ் பெண்ணுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) ஏழு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அறிக்கையில் குறிப்பிடுகையில், 2008 ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்த டி லூனா நோரிசா டான்சலும், கடந்த 2009 ஆம் ஆண்டில் தனது மகளுக்கான அந்த PR விண்ணப்பத்தில் தவறான போலி கல்வித் தகுதியைக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : முதலாளியை கத்தியால் தாக்கியதாக வீட்டுப் பணிப்பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது..!

இதனை அடுத்து, சென்டிரோ எஸ்காலர் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை, டி லூனா சமர்ப்பித்த பட்டச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் போன்றவை அந்தப் பள்ளியிலிருந்து வழங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பு, அக்டோபர் 25, 2017 அன்று டி லூனா கைது செய்யப்பட்டார்.

மேலும், அவர் ஐ.சி.ஏ-க்கு சமர்ப்பித்த டிப்ளோமா மற்றும் டிரான்ஸ்கிரிப்ட் ஆகியவை பள்ளியிலிருந்து வரவில்லை, என்பதையும் ஐ.சி.ஏ. கூறியுள்ளது.

குடிநுழைவு விண்ணப்பங்களில் போலியான தகவல்களைக் கொடுத்தது அல்லது முக்கியமான தகவல்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் குப்பை தொட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை; தத்தெடுக்க பலர் விருப்பம்..!

“இது போன்ற குற்றத்தில் தண்டனை பெற்றவர்களுக்கும், மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஐ.சி.ஏ.வால் மதிப்பாய்வு செய்யப்படும்” என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.