சிங்கப்பூரில் குப்பை தொட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை; தத்தெடுக்க பலர் விருப்பம்..!

Abandoned baby boy found alive in bin chute at bedok north hdb block

சிங்கப்பூரில் கைவிடப்பட்ட நிலையில் குப்பைதொட்டியொன்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு உலகம் முழுவதிலுமிருந்து அனுதாபம் வெளியாகியுள்ளதுடன் பலர் அந்த குழந்தையை தத்தெடுக்க முன்வந்துள்ளனர்.

பெடோக் வடக்கில் உள்ள ஒரு எச்டிபி தொகுதி குப்பைத் தொட்டியில், ஆண் குழந்தை ஒன்று கடந்த ஜனவரி 7 உயிருடன் காணப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் குப்பை தொட்டியில் கண்டெடுப்பு..!

துப்புரவாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, இரத்தக் கறை படிந்த சூப்பர்மார்கெட் பிளாஸ்டிக் பையில் குழந்தை சுற்றப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டனர்.

இந்நிலையில், சிங்கப்பூரின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பிடம் பலர் தாங்கள் அந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஏழு பெண்கள் அந்த குழந்தையை தாங்கள் பராமரிக்க விரும்புகின்றோம் அல்லது தத்தெடுக்க விரும்புகின்றோம் என தெரிவித்து உள்ளுர் பத்திரிக்கைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை மிஞ்சும் பங்களாதேஷ் பொருளாதாரம்.!

“குழந்தைக்காக நான் எதனையும் செய்ய தயாராகயிருக்கின்றேன்” என சாகிரா ஸ்லாமட் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப்பெண்களை பார்க்கும் போது நான் பொறாமைப்படுகின்றேன், எனது சகோதரிக்கு ஐந்து பிள்ளைகள் எனக்கும் அத்தனை பிள்ளைகள் வேண்டும் என்பது எனது விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் வேண்டுகோள் விடுத்துள்ளதை சிங்கப்பூரின் சமூக மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சு (MSF) உறுதி செய்துள்ளது. காவல்துறையினர் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.