சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை மிஞ்சும் பங்களாதேஷ் பொருளாதாரம்.!

Bangladesh economy to outshine Singapore and Malaysia

பங்களாதேஷின் பொருளாதாரம் வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் நாடுகளின் பொருளாதாரத்தை விட உயர்ந்து உலகின் 30 வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.

பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையத்தின் (Cebr) உலக பொருளாதார லீக் அட்டவணை 2020 என்ற இந்த உலகளாவிய அறிக்கையில், பங்களாதேஷின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் அந்த அட்டவணையில் 40 வது இடத்திலிருந்து 2029 மற்றும் 2034க்குள் முறையே 26 மற்றும் 25 வது இடத்திற்கு உயரும் என்று கூறுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து; இந்திய லாரி ஓட்டுநர் கைது..!

கடந்த ஆண்டுகளில் பங்களாதேஷின் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், 2018 ஆம் ஆண்டில் நாடு 7.9 சதவீதவளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளாதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் பொருளாதாரம் அடுத்த ஒன்பது ஆண்டுகளில், ஈர்க்கக் கூடிய விகிதத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :“அற்புதமான பிரிட்டன் தமிழ் சமூகமே” என்று தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரிட்டன் பிரதமர்..!

இதில் 2020 ஆம் ஆண்டில் உலக பொருளாதார லீக் அட்டவணையில் பங்களாதேஷ் 40 வது இடத்திலிருந்து 2034 ஆம் ஆண்டில் 25 வது இடத்திற்கு உயரும் என்று கூறப்படுகிறது.