சிங்கப்பூரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து; இந்திய லாரி ஓட்டுநர் கைது..!

Braddell Road Accident : சிங்கப்பூர் பிராடெல் சாலை மற்றும் பிசான் சாலை சந்திப்பில் நேற்று வியாழக்கிழமை (ஜன. 16), எஸ்.பி.எஸ் போக்குவரத்து பேருந்து, லாரி மற்றும் கார் ஆகியவை சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) மற்றும் போலீசார் மாலை 3.30 மணியளவில் எச்சரிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : 2020 சீன புத்தாண்டு கொண்டாட்டம்; சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுமா.?

இந்நிலையில், விபத்தில் சிக்கிய அவர்களை டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 22 வயது ஆண் மற்றும் 46 வயது பெண் ஆகியோர் சுயநினைவு அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதை தொடர்ந்து, பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், இதில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 23 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க : “அற்புதமான பிரிட்டன் தமிழ் சமூகமே” என்று தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரிட்டன் பிரதமர்..!

இந்த 23 வயதான இந்திய நாட்டை சேர்ந்தவர், மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்கு ஓட்டுநர் உரிமம் பெற்றதாகவும் இருபது நாட்களாக ஓட்டுநர் பணி செய்துவருவதாகவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

https://www.facebook.com/hockchuan.lee.35/videos/608002836440492/?t=26

இந்த விபத்தில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது இடது கையில் ஒரு சிறிய வெட்டு மற்றும் லேசாக நொண்டி நடந்து செல்வதைக் காண முடிந்ததாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.