2020 சீன புத்தாண்டு கொண்டாட்டம்; சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுமா.?

on-arrival-test malaysia-truck-drivers

Heavy traffic expected at Woodlands, Tuas checkpoints : சீனப் புத்தாண்டு (Chinese New Year) ஒரு முக்கியமான சீனத் திருவிழா ஆகும்.

இந்த புத்தாண்டு சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், மக்காவு, தைவான், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியசு, மற்றும் பிலிப்பீன்சு உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 1.3 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் பறிமுதல்; 5 பேர் கைது..!

இந்நிலையில் சிங்கப்பூரில், சீனப் புத்தாண்டு கொண்டாடப்பட இருப்பதால் விடுமுறை நாட்களில், உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் ஆகிய இரு நில சோதனைச் சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) புதன்கிழமை நேற்று (ஜனவரி 15) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் வாகனங்களின் எண்ணிக்கை ஜனவரி 17 முதல் 28-ஆம் தேதி வரை அதிகரிக்கும் என்றும், அதேபோல் சிங்கப்பூருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஜனவரி 25 முதல் 28-ஆம் தேதி வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நில சோதனைச் சாவடிகள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் வழியாக அதிகமான மக்கள் கடந்து செல்வதன் காரணமாக தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று ICA விளக்கியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தாய்நாடு திரும்பும் தமிழ் உறவுகள் கொண்டு செல்லும் அன்பளிப்புகள் என்ன?

உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளை அன்றாடம் 4,15,000 மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கையானது பண்டிகைக் காலங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ICA கூறுகையில், “கடந்த மாதம் 20ஆம் தேதியில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அவ்விரு சோதனை சாவடிகளைக் 4,75,000 பேர் கடந்து சென்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இதுவே அதிகமான எண்ணிக்கை ஆகும்”.

மேலும், இந்த தாமதங்களை தவிர்ப்பதற்கு, “ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் செல்லுபடியாகும் தங்களது சரியான பாஸ்போர்ட்டை சரிபார்த்து உறுதிப்படுத்தி கொண்டு வர வேண்டும் ” என்று ICA பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கூடுதலாக, “பட்டாசுகள்,‘ பாப்-பாப் ’போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களையும் அல்லது ‘bak kwa’, முட்டை மற்றும் பானையில் வைக்கப்பட்ட செடிகள் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களையும், ICA மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

எனவே, வரும் சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது சோதனைச் சாவடிகளில் போக்குவரத்துத் தாமதங்களை பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.