“பானத்தில் இருந்த கரப்பான்பூச்சியைக் கடித்தேன்”- வாடிக்கையாளரின் ஃபேஸ்புக் பதிவால் அதிர்ச்சி!

"பானத்தில் இருந்த கரப்பான்பூச்சியைக் கடித்தேன்"- வாடிக்கையாளரின் ஃபேஸ்புக் பதிவால் அதிர்ச்சி!
Photo: Pamster Tan/Facebook

 

கடந்த மார்ச் 18- ஆம் தேதி அன்று நண்பகல் 12.00 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள குயின்ஸ்டவுன் எம்ஆர்டியில் (Queenstown MRT) அமைந்துள்ள Mr Bean’s என்ற பானக்கடையில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் ஒருவகையான பானத்தை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்

அதைத் தொடர்ந்து, அந்த பானத்தை பெண் பருகியுள்ளார். அப்போது, பாலில் இருந்த முறுகலான பொருளைக் கடித்துள்ளார். பின்னர், அதனை பார்த்த போது, பானத்தில் கரப்பான் பூச்சி இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அந்த பெண் வாடிக்கையாளர் ‘Pamster Tan’ என்ற பெயரிலான ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பானத்தில் கரப்பான்பூச்சி இருக்கும் புகைப்படத்தையும், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூர் உணவுக் கழகத்திற்கும் (Singapore Food Agency) வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கோரிய Mr Bean’s பானக்கடை நிர்வாகம், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.

ஸ்கூட் விமானத்தில் வந்த பயணியிடம் 20.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

பெண் வாடிக்கையாளர் வாங்கி அருந்தியது சோயா பால் என்பது தெரிய வந்துள்ளது.