வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்

வெளிநாட்டு ஊழியரை

தூங்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியரை நாசம் செய்ததாக 20 வயதான ஆடவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இரவு வீடு திரும்பிய ஆடவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடையவரா நீங்கள்.. இந்த பதிவு உங்களுத்தான்

மருத்துவ துறையில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் முருகன் என்ற அந்த ஆடவர், பின்னர் ஊழியரை பாலியல் நாசம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

பாலியல் நாசம் செய்த குற்றச்சாட்டை இன்று (மார்ச் 18) ஆடவர் ஒப்புக்கொண்டார். மானபங்கம் செய்த மற்றுமொரு குற்றச்சாட்டும் தண்டனையின்போது பரிசீலிக்கப்படும்.

சிங்கப்பூரில் பராமரிப்பு ஊழியராக பணிபுரியும் 34 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்த ஊழியர் இதில் பாதிக்கப்பட்டுள்ளார். அடையாளத்தைப் பாதுகாக்கும் நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியருக்கு புத்தம் புதிய கார் – “வாக்குகளை நிறைவேற்றுவதில் முதலாளி சிறந்தவர்”

என்ன நடந்தது?

இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் 27 அன்று இரவு 10.30 மணியளவில், கிம் கீயட் அவென்யூவில் உள்ள HDB பிளாட்டின் கீழ் தளத்தில் நடந்துள்ளது.

ஊழியர் தனது உறவினருடன் கீழ் தளத்தில் மது அருந்திக்கொண்டு அரட்டை அடித்து கொண்டிருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

காலையில் விமான பயணத்திற்கு செல்ல தயாராவதற்காக வேண்டி ஊழியரின் உறவினர் நள்ளிரவு 1.30 மணியளவில் அவரது வீட்டுக்குத் திரும்பியதாக துணை அரசு வழக்கறிஞர் ஹோ மே கிம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு செல்லும் வழியில், தங்கும் விடுதியில் ஊழியரை இறக்கி விட இருந்தார் உறவினர். ஆகையால் கீழ் தளத்தில் காத்திருந்த ஊழியர், ​​அப்படியே கான்கிரீட் ஸ்லாப்பில் தூங்கினார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீகாந்த், ஊழியரின் அருகே மேஜையில் அமர்ந்தார். பின்னர் மது போதையில் படுத்து இருந்ததாக சொல்லப்படும் ஊழியரின் அந்தரங்க உறுப்புகளை தொட்டுள்ளார்.

மேலும் ஊழியரின் ஆடையின் உள்ளே கையை வைத்த ஸ்ரீகாந்த், பாலியல் செயலைச் செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர் விழித்து பார்த்தபோது அவரது அந்தரங்க உறுப்புகள் வெளியில் தெரிவதையும், ஸ்ரீகாந்த் அவரது காலடியில் அமர்ந்திருப்பதையும் கண்டார்.

பின்னர் ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பி ஓட, வெளிநாட்டு ஊழியர் அவரைத் துரத்தினார். இருப்பினும், ஸ்ரீகாந்த் தப்பித்து அருகில் இருந்த அவரின் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அன்று காலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீகாந்த் மீது நன்னடத்தை மற்றும் சீர்திருத்தப் பயிற்சிக்கு மதிப்பிட வேண்டி இரண்டு அறிக்கைகளை இன்று (மார்ச் 18) நீதிமன்றம் பரிந்துரைத்தது.

சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடையவரா நீங்கள்.. இந்த பதிவு உங்களுத்தான்

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை.. உறுப்புகளை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, பிரம்படி